திருகோணமலை கடற்படை துறைமுகத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை கடற்படையின் செயற்பாட்டு திறன்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றத்தை பார்வையிடும் பொருட்டு, ஜூலை 30 அன்று திருகோணமலை கடற்படை துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
வருகை தந்த பாதுகாப்பு பிரதி அமைச்சரை, இலங்கை கடற்படையின் பிரதிப் இரத்தமா அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே இராணுவ மரபுகளுக்கு அமைவாக வரவேற்றார்.
விஜயத்தின் போது, திருகோணமலை கடற்படை துறைமுக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிதக்கும் துறைமுகம் (Floating Dock) மற்றும் புதிய ஜெட்டி ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் பார்வையிட்டார். தேசிய கடல்சார் பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கும், இலங்கை கடற்படையின் செயற்பாட்டு தயார்நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கும் இம்மூலோபாய உட்கட்டமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், நிர்மாணப் பணிகளை தரநிலைகளைப் பேணி, அதிக செயல்திறனுடனும், துரிதமாகவும் நிறைவு செய்வதற்கான தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.
விஜயத்தின் நிறைவில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்கள், ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களுடன் கடற்படை துறைமுகத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி மற்றும் கடற்படையின் திறன் மேம்பாடு தொடர்பாக சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதிக் கட்டளைத் தளபதி கொமடோர் ஹரித ஜயதேவ, சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஊடக ஆதரவு - www.defence.lk













