இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சிக்கு கடற்படையின் பங்களிப்பு
இலங்கை இராணுவத்தின் 513வது காலாட்படை படையணியின் 31வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2026 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் கீரிமலை கருகம்பனை சனசமூக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சிக்கு கடற்படை கட்டளையினால் பங்களிப்பு வழங்கப்பட்டது.
இதன்படி, இலங்கை கடற்படையின் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் சமூக நலன்சார் முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், வடக்கு கடற்படை கட்டளையின் 'இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தின் கடற்படை வீரர்கள் குழுவொன்று, இந்த உயரிய சமூகப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக இவ்வாறு தமது பங்களிப்பை வழங்கினர்.
1 /
6













