மேற்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளை தளபதியாக ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 31) மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து அக்கட்டளையின் தளபதியாக கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படை மரபுகளுக்கு அமைவாக புதிய கட்டளை தளபதியை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு வரவேற்றதை அடுத்து, அக்கட்டளையின் கட்டளை தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஜகத் குமாரவினால் கட்டளை தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக புதிய கட்டளை தளபதியிடம் கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.
1 /
6













