இலங்கை தன்னார்வக் கடற்படையின் புதிய தளபதியாக கொமடோர் அருண விஜயவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை தன்னார்வக் கடற்படையின் 31 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கொமடோர் அருண விஜயவர்தன, இன்று (2026 ஜூலை 24) வெலிசரயிலுள்ள தன்னார்வக் கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை தன்னார்வக் கடற்படையின் தளபதியாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படைப் பாரம்பரிய முறைப்படி கொமடோர் அருண விஜயவர்தன அவர்களுக்குத் தன்னார்வக் கடற்படைத் தலைமையகத்தில் வரவேற்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வக் கடற்படையின் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய அவர்களினால், தன்னார்வக் கடற்படைத் தலைமையகத்தில் வைத்துத் தளபதி பதவிக்கான கடமைகள் புதிய தளபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், தன்னார்வக் கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துகளைத் தொடர்ந்து, ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய அவர்களுக்குக் கடற்படைப் பாரம்பரிய முறைப்படி தன்னார்வக் கடற்படைத் தலைமையகத்திலிருந்து பிரியாவிடை வழங்கப்பட்டது.













