EVENT NEWS 2026

சர்வதேச கண்டல் தாவர தினத்தை முன்னிட்டு கிழக்கு கடற்படை கட்டளையினால் கண்டல் தாவர கன்றுகள் நடும் திட்டம்

29 Jul 2026

இலங்கை கடற்படையினரால் 'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தின் கீழ் நாட்டைச் சுற்றியுள்ள கடற்கரையைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, 400 கண்டல் தாவர கன்றுகளை நடும் திட்டம் இலங்கை கடற்படை கப்பல் 'லங்காபடுன' நிறுவனத்திற்கு அருகிலுள்ள வெருகல் ஆறு, உள்ளக்களி களப்பு மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 2026 ஜூலை 26 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

'க்ளீன் ஸ்ரீலங்கா' தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி பணிக்குழுவின் முதன்மைப் பங்குதாரராக இலங்கை கடற்படை பல சுற்றாடல் நட்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. டோக்கியோ சிமென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் கடற்கரைப் பாதுகாப்பை அதிகரித்தல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துதல் என்பனவாகும்.

இதற்கமைய, இந்த கண்டல் தாவர கன்றுகள் நடும் நிகழ்வில் இலங்கை கடற்படை கப்பல் 'லங்காபடுன' நிறுவனத்தின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட கடற்படை வீரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Accessibility Tools