EVENT NEWS 2026

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு கடற்படையின் கடற்படையின் பங்களிப்பு

13 Jul 2026

“டெங்கு நோயற்ற கொழும்பு நோக்கி” எனும் தொனிப்பொருளின் கீழ் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு ஆகியன இணைந்து முன்னெடுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இலங்கை கடற்படை தனது செயற்திறனான பங்களிப்பை வழங்கி வருகின்றது. அதற்கமைய, 2026 ஜூலை மாதம் 13 ஆம் திகதி ஒன்பதாவது (09) நாளாகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வேலைத்திட்டத்தின் மூலம் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தி சுகாதாரப் பாதுகாப்புமிக்க சூழலொன்றைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்கப்பட்டது.

சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளையகத்தைச் சேர்ந்த ஐம்பத்தொன்பது (59) கடற்படைப் பணியாளர்கள் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பங்களிப்பு வழங்கினர். அதற்கமைய கோட்டை, ராகம, களனி மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் ஆயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு (1,158) இடங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், அங்கு டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய பத்தொன்பது (19) இடங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக, சூழல் முறையாகப் பரிசோதிக்கப்பட்டு, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றும் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இலங்கை கடற்படையின் ஏனைய கட்டளையகங்களும் தமது கடற்படை முகாம்களை டெங்கு நுளம்புகளற்ற பாதுகாப்பான வலையங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

Accessibility Tools