EVENT NEWS 2026

சுகாதாரமான சூழலை உருவாக்க டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் கடற்படை

17 Jul 2026

“டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இலங்கை கடற்படை தனது தீவிர பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இத்தேசியத் திட்டம் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தேசிய திட்டமானது, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதையும் மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2026 ஜூலை 17 ஆம் திகதியுடன் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் பதின்நான்காவது (14) நாள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்டுள்ள 108 கடற்படை வீரர்கள் இந்த தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்காகத் தமது பங்களிப்பை வழங்கினர். அதற்கமைய, முகத்துவாரம், கம்பஹா, ராகம, பொரளை, மஹர, நாரஹேன்பிட்ட, பாணந்துறை மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் மூவாயிரத்து அறுபத்தி மூன்று (3,063) இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு டெங்கு நுளம்புகள் பெருகும் அறுபது (60) இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

இந்த தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு இணையாக, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை கண்டறிவதற்காக அனைத்து கடற்படை கட்டளைகளுக்குள்ளும் முறையான சுற்றுச்சூழல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதனைத் தொடர்ந்து அவ்விடங்களை சுத்தப்படுத்துதல் மற்றும் அழிக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Accessibility Tools