ஓய்வுபெற்ற கொடி அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தனர்
ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் (Association of Retired Flag Rank Officers – ARFRO) தலைவர் மேஜர் ஜெனரல் சுசில் சந்திரபால தலைமையிலான அச்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர், இன்று (2026 நவம்பர் 18) இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தனர்.
இச் சந்திப்பின் போது, ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகளின் நலன்புரி மற்றும் அவர்களுடனான தொடர்ச்சியான தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், அச்சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதன் தலைவர் கடற்படைத் தளபதிக்கு விளக்கமளித்தார். மேலும், சங்கத்திற்கு இலங்கை கடற்படையினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்பிற்காக சங்கத்தின் சார்பில் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் சேவைப் பெருமை, சகோதரத்துவம் மற்றும் தேசியப் பொறுப்புணர்வு ஆகியவற்றைத் தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாப்பதுடன், அவர்களின் அனுபவங்களையும் அறிவையும் தேசிய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவதில் சங்கம் ஆற்றிவரும் பங்களிப்பை இதன்போது கடற்படைத் தளபதி பாராட்டினார்.
மேலும், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.













