இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் புதிய கட்டளைத் தளபதி மற்றும் கட்டளை அதிகாரியாக கெப்டன் தம்மிக்க கமகே கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் புதிய தளபதி மற்றும் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கெப்டன் தம்மிக்க கமகே, இன்று (2026 நவம்பர் 20) ஷிக்ஷா நிறுவனத்தில் தனது புதிய பதவிகளுக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன்படி, கடற்படை மரபுகளுக்கு அமைவாக கெப்டன் தம்மிக்க கமகே இலங்கை கடற்படைக் கப்பல் ஷிக்ஷா நிறுவனத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளைத் அதிகாரியாகப் பணியாற்றிய கெப்டன் களும் மாரம்பகே அவர்களால் உத்தியோகபூர்வமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், முப்பத்து மூன்றாவது (33) ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த கெடட் அதிகாரியாக கடற்படை சேவையில் இணைந்து, 2003ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட கெப்டன் தம்மிக்க கமகே, ஷிக்ஷா நிறுவனத்தின் தளபதி மற்றும் கட்டளைத் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கல்விசார் கற்கைகளுக்கான பணிப்பாளர்கப் பணியாற்றியுள்ளார்.













