EVENT NEWS › 2026

புதிய கடற்படை பதில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் நிலங்க கங்கானம்கே பொறுப்பேற்றார்

16 Nov 2026

இலங்கை கடற்படையின் புதிய பதில் பொறியியல் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட கொமடோர் நிலங்க கங்கானம்கே, இன்று (2026 நவம்பர் 16) கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ லை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 10 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த கடேட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து, 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமடோர் நிலங்க கங்கானம்கே, பதில் பணிப்பாளர் நாயகம் (பொறியியல்) பதவியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், கடல்சார் பொறியியல் பணிப்பாளராகக் கடமையாற்றினார்.

Accessibility Tools