EVENT NEWS › 2026

கிழக்கு கடற்படை கட்டளையின் வசதிகளை விரிவுபடுத்தும் வகையில் கல்குடா அதிகாரிகள் விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்டது

06 Nov 2026

கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான காஷ்யப நிறுவனத்தின் கல்குடா உப பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் விடுமுறை விடுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வு 2026 நவம்பர் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்றது.

அதன்படி, கல்குடா கடற்படை உப பிரிவில் அமைந்திருந்த அதிகாரிகள் இல்லம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு விடுமுறை விடுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்படை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி நோக்கத்திற்காக இந்த விடுமுறை விடுதியை முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும், கடற்படையின் பிரதிப் பிரதானி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் 2026 நவம்பர் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற இந்த விடுமுறை விடுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில், திருகோணமலை (தெற்கு) கடற்படை பொறுப்பதிகாரி கெப்டன் ரவிந்து ஹரிச்சந்திர, இலங்கை கடற்படைக் கப்பலான காஷ்யப நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கொமாண்டர் உதயவீர குமாரநதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools