EVENT NEWS › 2026

லெப்டினன்ட் கொமாண்டர் லக்ஷான் ராமவிக்ரமவினால் எழுதப்பட்ட ‘இலங்கையின் விலங்கு பாதுகாப்புச் சட்டம்’ எனும் நூல் கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்பட்டது

17 Nov 2026

‘இலங்கையின் விலங்கு பாதுகாப்புச் சட்டம்’ எனும் தலைப்பில் லெப்டினன்ட் கொமாண்டர் லக்ஷான் ராமவிக்ரமவினால் எழுதப்பட்ட சட்டக் கல்வி நூல், இன்று (2026 நவம்பர் 17) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிடம் கையளிக்கப்பட்டது. சட்டக் கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்நூலைக் கடற்படைத் தளபதி இதன்போது பாராட்டி கௌரவித்தார்.

விலங்குகள் துன்புறுத்தல் தொடர்பாகப் பொலிஸ் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிப்பது முதல் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது வரை பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள், விலங்குகள் தொடர்பான குற்றங்களுக்கான அபராதத் தொகைகள், சிறைத்தண்டனைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கான உரிமையாளர்களின் சட்டப்பூர்வ பொறுப்புகள் மற்றும் விலங்குகளைக் கொண்டு செல்வது தொடர்பான சட்ட விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்ட அம்சங்கள் குறித்து இந்நூலில் லெப்டினன்ட் கொமாண்டர் லக்ஷான் ராமவிக்ரம எளிய முறையிலும் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.

Accessibility Tools