EVENT NEWS › 2026

புதிய MASTER CHIEF PETTY OFFICER OF NAVY ஆக MASTER CHIEF PETTY OFFICER கேஎம்ஏஎஸ் குமாரசிங்க நியமனம்

17 Nov 2026

இலங்கை கடற்படையின் புதிய MASTER CHIEF PETTY OFFICER OF NAVY (MCPON) ஆக, MASTER CHIEF PETTY OFFICER கேஎம்ஏஎஸ் குமாரசிங்க இன்று (2026 நவம்பர் 17) நியமிக்கப்பட்டார். இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களால், குறித்த பதவிக்குரிய கைப்பட்டை மற்றும் கோல் ஆகியன MASTER CHIEF PETTY OFFICER கேஎம்ஏஎஸ் குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்டதுடன், அவருக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்வு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன்படி, இதற்கு முன்னர் MASTER CHIEF PETTY OFFICER OF NAVY ஆகப் பணியாற்றிய MASTER CHIEF PETTY OFFICER ஏஎச்டி வீரதுங்க, 22 வருட சேவைக் காலத்தை நிறைவு செய்து 2026 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி கடற்படையிலிருந்து ஓய்வுபெற உள்ளதையடுத்து, புதிய MASTER CHIEF PETTY OFFICER OF NAVY ஆக சிரேஷ்ட கடற்படைவீரரான MASTER CHIEF PETTY OFFICER கேஎம்ஏஎஸ் குமாரசிங்க நியமிக்கப்பட்டார்.

MASTER CHIEF PETTY OFFICER கேஎம்ஏஎஸ் குமாரசிங்க, 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி 127ஆவது ஆட்சேர்ப்பின் கீழ் இலங்கை கடற்படையில் இணைந்துள்ளதுடன், MASTER CHIEF PETTY OFFICER OF NAVY ஆக நியமிக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை கடற்படைக் கப்பலான தக்ஷிலா நிறுவனத்தில் MASTER AT ARMS ஆக கடமையாற்றி வந்தார்.

மாலுமிகளின் நலன்புரி, பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடனும் தரமான முறையிலும் முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்காக, MASTER CHIEF PETTY OFFICER OF NAVY அவர்களுக்கு உரிய வழிமுறைகள் ஊடாக விடயங்களைச் சமர்ப்பிக்கும் அதிகாரம் உள்ளது. மேலும், இப்பதவிக்கு நியமிக்கப்படும் சிரேஷ்ட கடற்படைவீரர், கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட கடற்படைவீரராக, உத்தியோகபூர்வ நிகழ்வுகள், அணிவகுப்புகள் மற்றும் ஏனைய இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகின்றார்.

மேலும், இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் (பணியாளர்) ரியர் அட்மிரல் இந்திக த சில்வா அவர்களும் கலந்து கொண்டார்.

Accessibility Tools