EVENT NEWS › 2026

‘டிட்வா’ சூறாவளியின் போது கலா ஓயா பகுதியில் பேருந்தில் சிக்கியிருந்த 69 பேரைக் காப்பாற்றிய கடற்படை வீரர்களுக்கு சர்வதேச மற்றும் தேசிய உயிர்காப்புப் பதக்கங்கள் வழங்கப்பட்டன

19 Nov 2026

2025ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி காரணமாக கலா ஓயா பகுதியில் அனர்த்தத்திற்குள்ளான பயணிகள் பேருந்தில் சிக்கியிருந்த 69 பொதுமக்களை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்டமைக்காக, இலங்கை கடற்படையின் விரைவு நடவடிக்கை படகுப் படைப்பிரிவின் (Rapid Action Boat Squadron) மூன்று (03) கடற்படை வீரர்களுக்கு பொதுநலவாய உயிர்காப்புச் சேவைப் பதக்கம் மற்றும் இலங்கை உயிர்காப்பு வீரப் பதக்கம் ஆகியவற்றுடன் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு, இன்று (2026 நவம்பர் 19) கொழும்பில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

அதன்படி, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Andrew Patrick மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth ஆகியோரின் தலைமையில், பொதுநலவாய அரச உயிர்காப்புச் சங்கம் மற்றும் இலங்கை உயிர்காப்புச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், விரைவு நடவடிக்கை படகுப் படைப்பிரிவின் ப்ளீட் சீப் பெடி ஒபிசர் எஸ்ஏஈஎல் செனவிரத்ன, லீடிங் சீமன் பிகேஏ பிரசாத் மற்றும் ஏபல் சீமன் எஸ்டிடி அபேரத்ன ஆகிய கடற்படை வீரர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும், இந்நிகழ்வில் இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன, கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன, இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் தலைவர் திரு. அதுல சேனாரத்ன மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அசங்க நாணயக்கார உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools