தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை சீருடைத் தொழிற்சாலையின் 18ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்ச்சியொன்று
தெற்கு கடற்படை கட்டளையின் காலி கெப்டன் விநியோக மற்றும் சேவைகள் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள கடற்படை சீருடைத் தொழிற்சாலையின் 18ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குறித்த தொழிற்சாலையின் பணியாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று (2026 நவம்பர் 07) குறித்த வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் தேவையைக் கருத்திற்கொண்டு, குறித்த வைத்தியசாலை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த சமூக நலன்புரி நிகழ்ச்சியில், கட்டளை கெப்டன் விநியோகம் மற்றும் சேவைகள் திணைக்களத்தைச் சேர்ந்த கடற்படை வீரர்கள், சீருடைத் தொழிற்சாலையின் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்களிப்புச் செய்தனர்.
மேலும், இந்நிகழ்வில் இலங்கை கடற்படைக் கப்பல் நிபுண நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கொமாண்டர் இரங்க ஸ்வர்ணஹங்ச, கட்டளை மருத்துவ அதிகாரி மருத்துவ லெப்டினன்ட் கொமாண்டர் மதுக ரணவீர உள்ளிட்ட கடற்படைப் பணியாளர்கள், கடற்படை ஆடைத் தொழிற்சாலையின் ஆண், பெண் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.













