EVENT NEWS › 2026

‘அத்தம’ தேசிய தூய்மைப்படுத்தல் தின வேலைத்திட்டத்திற்கு இணையாக முன்னெடுக்கப்படும் சிரமதான மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையின் சமூகப் பங்களிப்பு.

01 Nov 2026

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், 'தூய்மையான தேசத்திற்கான தேசிய குடிமக்கள் பணி' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மைப்படுத்தல் தின வேலைத்திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையினரால் 2026 ஒக்டோபர் 31 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பல்வேறு சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, இச்சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், கடவத்தை நகரை அண்மித்த பகுதிகள், மொரகொல்ல பொது சுகாதார அலுவலகத்தைச் சூழவுள்ள வளாகம், நவலோக உத்யானபுர சிறுவர் பூங்கா, விதாரண்தெணிய சுதர்ஷன கிராமத்திலுள்ள குளம் மற்றும் வீரகெட்டிய ஹதபான்கல கிராமத்திலுள்ள குளத்தைச் சூழவுள்ள பகுதிகள், சிலாவத்துறை முசலி தேசிய பாடசாலை வளாகம், வனாத்தவில்லுவ பட்டுவெவவை அண்மித்த பகுதிகள், இலந்தண்டிய கடற்கரை மற்றும் முந்தலம் தெற்கு கனமுல்ல கிராமத்திலுள்ள கால்வாய் ஆகியவற்றைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.மேலும், லாஹுகல நீலகிரி விகாரையின் வீதியோரங்களில் மரக்கன்றுகள் நடுதல், யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதி மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகம் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளுக்கும் இலங்கை கடற்படையினர் தமது சமூக நலன்புரிப் பங்களிப்பை வழங்கினர்.

இந்தத் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் ஊடாக, குறித்த பிரதேசங்களில் சேகரிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுகளைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வகைப்படுத்தி, உரிய நடைமுறைகளுக்கு அமைய அகற்றுவதற்கு இலங்கை கடற்படையினர் பங்களிப்பு வழங்கினர்.

Accessibility Tools