EVENT NEWS › 2026

கடற்படை மரியாதையுடன் ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

15 Nov 2026

இலங்கை கடற்படையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க, இன்று (2026 நவம்பர் 15) கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையிலான கடற்படை நிர்வாகக் குழுவினர், இன்றைய தினம் தனது 55 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்கவிற்கு கடற்படைத் தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கடற்படை பாரம்பரிய முறைப்படி சிறப்பு அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்குக் கௌரவம் அளிக்கப்பட்டது. பின்னர், சக அதிகாரிகளிடம் விடைபெற்று கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றபோது, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்கவிற்கு கடற்படை பாரம்பரிய முறைப்படி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

1991 ஆம் ஆண்டு கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 09 ஆவது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க, தனது 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக் காலத்தில், மோட்டார் வாகனப் பொறியியல் பிரதி பணிப்பாளர், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கல்வி ஆலோசகர், பொறியியல் சேவைகள் பணிப்பாளர், கடற்படை வடிவமைப்புப் பணிப்பாளர், மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளின் கொமடோர் அதிகாரி கப்பல்துறை, கடல்சார் பொறியியல் பணிப்பாளர் மற்றும் பொறியியல் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

அத்துடன், ‘2030 மற்றும் அதற்குப் பின்னரான கடற்படையின் மூலோபாயத் தொலைநோக்கு’ (NAVSTRAT – 2030 & BEYOND) எனும் திட்டத்தின் கீழ், எதிர்காலத்தில் திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை நிபுணத்துவம் வாய்ந்த மனிதவளத்துடன் இலங்கை கடற்படை எவ்வாறு மாற்றமடைய வேண்டும் என்பது தொடர்பான மூலோபாயத் திட்டத்தைத் தயாரிக்கும் குழுவின் சிரேஷ்ட அதிகாரியாகவும் செயற்பட்ட ரியர் அட்மிரல் ஹசந்த தசநாயக்க, இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.

Accessibility Tools