33 பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளுக்கான அடிப்படை கடல்சார் தொழில்நுட்ப அறிவுப் பயிற்சி நெறி திருகோணமலையில்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயிர்காப்பு அதிகாரிகளுக்காக முதன் முறையாக திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடத்தப்பட்ட அடிப்படை கடல்சார் தொழில்நுட்ப அறிவு தொடர்பான பயிற்சி நெறி, 2026 நவம்பர் மாதம் 17ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதற்கமைய, மூன்று (03) நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி நெறியின்போது, உயிர்காப்புப் பணிகளுக்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முடிச்சு வகைகள் தொடர்பான நடைமுறை அறிவு, உயிர்காப்பு உபகரணங்களைச் சரியான முறையில் கையாளுதல் மற்றும் பராமரித்தல், துணை உபகரணங்கள் மற்றும் உயிர்காப்புப் படகுகள் (Life Rafts) தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறை அறிவு வழங்கப்பட்டது.
1 /
6













