EVENT NEWS › 2026

கடற்படையினரால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் மாத்தளை இபுல்கொல்லையில் மக்கள் பாவனைக்காகக் கையளிப்பு

12 Nov 2026

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கும்பல்ஒலுவ ஆரம்பப் பாடசாலை வளாகத்தில் நிறுவப்பட்ட ஒரு (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம், 2026 நவம்பர் மாதம் 11ஆம் திகதி குறித்த பாடசாலை வளாகத்தில் பொதுமக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.

சிறுநீரக நோயாளர்கள் பதிவாகும் மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இபுல்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள கும்பல்ஒலுவ ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்களின் அன்றாட குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வந்தது.

அதற்கமைய, இத்தேவையை அடையாளம் கண்டு, சுகாதார அமைச்சின் தலைமையில், இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பங்களிப்புடனும், சிரச கம்மெத்த அமைப்பின் நிதிப் பங்களிப்புடன், இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம், அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கும்பல்ஒலுவ ஆரம்பப் பாடசாலை மாணவ, மாணவியர்கள் மட்டுமன்றி, இபுல்கொல்லை பிரதேசத்தைச் சூழவுள்ள பெருமளவிலான மக்களுக்கும் தங்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீரை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இந்த மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டதன் மூலம், இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் இதுவரை 1,165 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools