EVENT NEWS › 2026

உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்வில் கடற்படையும் பங்களிக்கிறது

08 Nov 2026

முதலாம் உலகப் போர்க் காலம் முதல் இன்று வரை தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூர்ந்து மற்றும் அவர்களின் உன்னத அர்ப்பணிப்பிற்கு கௌரவம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு இன்று (2026 நவம்பர் 08) கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கு முன்பாக, பிரதமர் கௌரவ ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, விமானப்படைத் தளபதி மற்றும் முப்படைகளில் பணியாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நினைவேந்தல் தினம், தற்போது உயிர்நீத்த அனைத்து வீரர்களைகளையும் நினைவுகூர்ந்து, அவர்களின் உன்னத அர்ப்பணிப்பிற்கு கௌரவம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய, இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நினைவேந்தல் நிகழ்வு கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், அதற்கு இணையாக அனைத்து கடற்படைப் கட்டளைகளையும் உள்ளடக்கும் வகையில் உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும், கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு கொள்கை மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஜயந்த பண்டார அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கு இணையாக நடைபெற்ற வடக்கு கடற்படைக் கட்டளையின் நினைவேந்தல் நிகழ்வு, அக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன அவர்களின் தலைமையிலும், கிழக்கு கடற்படைக் கட்டளையின் நினைவேந்தல் நிகழ்வு அக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ் அவர்களின் தலைமையிலும், தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் நினைவேந்தல் நிகழ்வு அக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜீவ விஜேவர்தன அவர்களின் தலைமையிலும் நடைபெற்றன. அத்துடன், வடமத்திய கடற்படைக் கட்டளையின் நினைவேந்தல் நிகழ்வு அக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன அவர்களின் தலைமையிலும், வடமேற்கு கடற்படைக் கட்டளையின் நினைவேந்தல் நிகழ்வு அக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மாலன் பெரேரா அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது. தெற்கு கடற்படைக் கட்டளையின் நினைவேந்தல் நிகழ்வு அக் கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் அருண வீரசிங்க அவர்களின் தலைமையிலும், மேற்கு கடற்படைக் கட்டளையின் நினைவேந்தல் நிகழ்வு அக் கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் அருண விஜேவர்தன அவர்களின் தலைமையிலும், அந்தந்த கட்டளைகளுக்குட்பட்ட கப்பல்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.

Accessibility Tools