EVENT NEWS › 2026

மீனவ சமூகத்தினரிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் மற்றும் விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சித் திட்டம் காங்கேசன்துறையில்

03 Nov 2026

வடக்கு பிராந்தியத்தின் மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி, கடற்படையினருக்கும் அப்பகுதி மீனவ சமூகத்தினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு கடற்படைக் கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கலந்துரையாடலும் 2026 நவம்பர் 03 ஆம் திகதி வடக்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன தலைமையில் காங்கேசன்துறையிலுள்ள வடக்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

அதன்படி, இந்நிகழ்ச்சியின்போது மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், கடல் வழியாக மேற்கொள்ளப்படும் கடத்தல் நடவடிக்கைகள், ஒழுங்குமுறைச் செயற்பாடுகள், அத்துடன் கடல் வளங்களைப் பாதுகாப்பதற்காக நிலைபேறான மீன்பிடி முறைகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், இப்பிரச்சினைகளுக்கு வினைத்திறனான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், சட்டபூர்வமான மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் கடற்படை, இலங்கை கடலோரக் காவல்ப் படை திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் மீனவ சங்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் வடக்கு கடற்படைக் கட்டளையின் கீழ் பணியாற்றும் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோரக் காவல்ப்படை திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், யாழ்ப்பாண மாவட்ட உதவி மீன்பிடிப் பணிப்பாளர் திரு. கே அகிலன் உள்ளிட்ட மீன்பிடிப் பரிசோதகர்கள் மற்றும் அப்பகுதி மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools