உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், கடற்படை சங்கத்தின் தலைவர் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவித்தார்
உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொப்பி நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ரோஹான் அமரசிங்க அவர்களினால், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்கு பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு இன்று (2026 நவம்பர் 18) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
முதலாம் உலகப் போரின் முடிவின் 1918 நவம்பர் 11ஆம் நாளில், போரில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் நினைவேந்தல் நிகழ்வு, இன்று தாய்நாட்டிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த அனைத்து வீரமிக்க படைவீரர்களையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய, தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து வீரமிக்க படைவீரர்களையும் நினைவுகூரும் வகையில், இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவரினால் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை கடற்படை சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.













