கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ் கடமைகளைப் பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், இன்று (2026 நவம்பர் 06) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது புதிய பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடற்படை மரபுகளுக்கு அமைய, புதிய தளபதி கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படைப் பிரதிப் பிரதம அதிகாரி மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, கட்டளைத் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக புதிய தளபதியிடம் கடமைகளை ஒப்படைத்தார்.
மேலும், 22ஆவது ஆட்சேர்ப்பின் கீழ் கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றி வந்தார்.













