EVENT NEWS › 2026

இலங்கை கடற்படைக் கப்பல் ‘சிக்ஷா’ நிறுவனம் தனது 21ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

19 Nov 2026

வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் ‘சிக்ஷா’ நிறுவனத்தின் 21ஆவது ஆண்டு நிறைவு, 2026 நவம்பர் மாதம் 18ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

அதன்படி, ‘சிக்ஷா’ நிறுவனத்தின் 21ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை மரபுகளுக்கு அமைய, கடற்படையினரின் பிரிவுப் பரிசோதனை நிகழ்வு, குறித்த நிறுவனத்தின் கட்டளை அதிகாரியும் கட்டளைத் தளபதியுமான கெப்டன் கெளும் மாரம்பகேவினால் அன்றைய தினம் காலை ‘சிக்ஷா’ நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய விருந்துபசாரம் பொது உணவகத்தில் நடைபெற்றது.

மேலும், 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி நிறுவப்பட்ட ‘சிக்ஷா’ நிறுவனத்தின் 21ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உயிர்நீத்த கடற்படைப் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில், பௌத்த சமய மரபுகளுக்கு அமைய போதி பூஜை வழிபாட்டு நிகழ்வொன்று 2026 ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி நிறுவன வளாகத்தில் நடத்தப்பட்டது.

மேலும், இந்த ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் ‘சிக்ஷா’ நிறுவனத்தின் பயிற்சி நிறைவேற்று அதிகாரியான கொமாண்டர் கசுன் நுவரபக்ஷ உள்ளிட்ட அந்நிறுவனத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் மற்றும் பயிற்சி பெற்று வரும் கடற்படையினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools