கடற்படையின் சிறப்புப் படகுப் படையணி தனது 33ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது
2026 நவம்பர் 08ஆம் திகதி கொண்டாடப்பட்ட இலங்கை கடற்படையின் சிறப்புப் படகுப் படைப்பிரிவின் 33ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2026 நவம்பர் 01ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை, கடற்படை மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து, சமய நிகழ்வுகள் மற்றும் போர்வீரர்களுக்கான கௌரவ அஞ்சலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சிறப்புப் படகுப் படைப்பிரிவு மேற்கொண்டது.
இதற்கமைய, சிறப்புப் படகுப் படையணியின் 33ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை மரபுப்படி கடற்படைப் வீரர்களின் அணிவகுப்பு, குறித்த படையணியின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் லக்மால் வீரக்கொடி அவர்களினால் 2026 நவம்பர் மாதம் 06ஆம் திகதி நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய விருந்துபசாரம் பொது உணவகத்தில் நடைபெற்றது.
1993ஆம் ஆண்டு நவம்பர் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கடற்படையின் சிறப்புப் படகுப் படைப்பிரிவின் 33ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அப்படைப்பிரிவில் உயிர்நீத்த 58 கடற்படை வீரர்களை நினைவுகூர்ந்தும், அங்கவீனமுற்ற 42 வீரர்களுக்கு ஆசி வேண்டியும், பௌத்த சமய மரபுகளுக்கமைய தர்ம போதனை நிகழ்வு ஒன்று 2026 நவம்பர் 04ஆம் திகதி அப்படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
மேலும், 33ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சியொன்றும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகளில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்னாண்டஸ், அக்கட்டளையின் பிரதி தளபதி கொமடோர் சமிந்த குணரத்ன, சிறப்புப் படகுப் படைப்பிரிவின் பயிற்சிப் பாடசாலையின் தளபதி கெப்டன் தர்மசிறி ஹேரத் உள்ளிட்ட சிறப்புப் படகுப் படைப்பிரிவின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் பலரும் கலந்துகொண்டனர்.













