EVENT NEWS › 2026

விசேட படகுப் படையணிப் பயிற்சிப் பாடசாலையின் முதலாவது கட்டளை தளபதியாக கெப்டன் தர்மசிறி ஹேரத் கடமைகளைப் பொறுப்பேற்றார்

03 Oct 2026

திருகோணமலை விசேட படகுப் படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள பயிற்சிப் பாடசாலையின் முதலாவது கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்ட கெப்டன் தர்மசிறி ஹேரத், 2026 செப்டம்பர் 29 ஆம் திகதி கட்டளை தளபதியாகத் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

அதன்படி, விசேட படகுப் படையணிப் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்ற இக்கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வில், விசேட படகுப் படையணியின் கட்டளை அதிகாரி கமாண்டர் லக்மால் வீரக்கொடி, விசேட படகுப் படையணிப் பயிற்சிப் பாடசாலையின் பயிற்சி நிறைவேற்று அதிகாரி கமாண்டர் திஸ்ஸ குமார உள்ளிட்ட விசேட படகுப் படையணி தலைமையகத்தின் அதிகாரிகள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை பயிற்றுவிப்பாளர்கள், அத்துடன் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools