EVENT NEWS › 2026

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் பயிற்சிப் பாடநெறி ரங்கல நிறுவன வளாகத்தில் நடைபெற்றது

30 Oct 2026

அவசர இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி ஆபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் பயிற்சிப் பாடநெறியொன்று, இன்று (2026 ஒக்டோபர் 30) கொழும்பு, இலங்கை கடற்படைக் கப்பலான ரங்கல நிறுவன வளாகத்தில் கடற்படையினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்திப் பிரிவினால் (Chemical, Biological, Radiological and Nuclear - CBRN) ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப் பாடநெறியில், அவசர இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி ஆபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சி அமர்வுகளில், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் (NACWC) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொண்டது.

இதன் கோட்பாடு அமர்வின் போது, இரசாயன ஆபத்துகளைக் கண்டறிதல், அடையாளப்படுத்துதல், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் மீட்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், மேலும், இதன் செய்முறை அமர்வின் மூலம் அவசர இரசாயன ஆபத்தின் போது பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சாதனங்களை முறையாகக் கையாளுதல், நபர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல் மற்றும் அபாயகரமான இரசாயனச் சேர்வைகளைப் பாதுகாப்பாக அகற்றும் உத்திகள் குறித்தும் விழிப்புணர்வூட்டப்பட்டது.

Accessibility Tools