EVENT NEWS › 2026

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசுத் தூதரகத்தின் பிரதிநிதிகள் திருகோணமலை கடற்படை தளத்திற்கு விஜயம்

17 Oct 2026

இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசுத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான Senior Colonel Fu Xiao மற்றும் கடற்படை ஆலோசகரான Senior Captain Zheng Zhaoping உள்ளிட்ட பிரதிநிதிகள், 2026 ஒக்டோபர் 16 திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன், கிழக்கு கடற்படைக் கட்டளையின் பிரதி தளபதியான கொமடோர் சாமிந்த குணரத்னவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதன்படி, இந்த விஜயத்தின்போது, இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசுத் தூதரகத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதிக்கும் இடையில், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும், இந்த விஜயத்தை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Accessibility Tools