புதிய கடற்படைப் பரிசோதனைப் பணிப்பாளராக கொமடோர் புத்திக ரூபசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைப் பரிசோதனைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட கொமடோர் புத்திக ரூபசிங்க, இன்று (2026 ஒக்டோபர் 12) கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 23 ஆவது ஆட்ச்சேர்ப்பை சேர்ந்த கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து, 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமடோர் புத்திக ரூபசிங்க, கடற்படைப் பரிசோதனைப் பணிப்பாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், வடக்கு கடற்படைக் கட்டளையின் பிரதி கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றினார்.
1 /
6













