EVENT NEWS › 2026

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய பிரதி கட்டளைத் தளபதியாக கொமடோர் பிரசாத் விதானகே பதவியேற்பு

07 Oct 2026

வடக்கு கடற்படை கட்டளையின் புதிய பிரதி கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கொமடோர் பிரசாத் விதானகே, இன்று (2026 ஒக்டோபர் 07) வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அக்கட்டளையின் பிரதி கட்டளைத் தளபதி பதவிக்கான தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் பிரதி கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கொமடோர் புத்திக ரூபசிங்க, தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக கொமடோர் பிரசாத் விதானகேவிடம் வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து கையளித்தார்.

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 14வது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த கெடட் அதிகாரியாக கடற்படை சேவையில் இணைந்து, 1998 அக்டோபர் 6 அன்று உத்தியோகபூர்வமாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட இந்த சிரேஷ்ட அதிகாரி, வடக்கு கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அம்பாந்தோட்டை கடற்படைப் பொறுப்பு அதிகாரியாகவும், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.

Accessibility Tools