வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய பிரதித் தளபதியாக கொமடோர் தனுஜ ஷாமேந்த கடமைகளைப் பொறுப்பேற்றார்
வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய பிரதித் தளபதியாக நியமிக்கப்பட்ட கொமடோர் தனுஜ ஷாமேந்த இன்று (2026 ஒக்டோபர் 26) வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், அக்கட்டளையின் பிரதித் தளபதி பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
கடற்படை மரபுகளுக்கமைய புதிய பிரதித் தளபதியை வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு வரவேற்றதைத் தொடர்ந்து, அக்கட்டளையின் பிரதித் தளபதியாக கடமையாற்றிய கொமடோர் நலின் கோனகல அவர்களினால் கட்டளைத் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக புதிய பிரதித் தளபதியிடம் கடமைகள் ஒப்படைக்கப்பட்டன.
மேலும், ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது ஆட்சேர்ப்பின் கீழ் கெடட் அதிகாரியாக கடற்படையில் இணைந்து, 1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமடோர் தனுஜ ஷாமேந்த, வடமத்திய கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், கடற்படை நிர்வாகப் பணிப்பாளராக கடமையாற்றினார்.













