போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகள் மாத்தறை, தலல்ல, நாஒடுன்ன கடற்கரையில் சட்டத்தின் பிடியில்

24 Oct 2026

இலங்கை கடற்படையினர், இலங்கை கடலோரக் காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, மாத்தறை, தலல்ல, நாஒட்டுன்ன கடற்கரைப் பகுதியில் இன்று (2026 ஒக்டோபர் 24) காலை மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பத்து (10) பொதிகளும் பதினொரு (11) பயணப் பைகளும் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்தக் கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையது எனச் சந்தேகிக்கப்படும் ஒரு (01) டிங்கி படகும் கைப்பற்றப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்களை எதிர்வரும் காலங்களில் வழங்குவதற்கு இலங்கை கடற்படை எதிர்பார்க்கின்றது.

Accessibility Tools