EVENT NEWS › 2026

கடற்படையின் முதலாவது அடிப்படை நாய்கள் கையாளும் பயிற்சிநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெலிசரவில் இடம்பெற்றது.

30 Oct 2026

இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள நாய்களைக் கையாளும் வீரர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், கடற்படையினால் முதன்முறையாக நடத்தப்பட்ட அடிப்படை நாய்களைக் கையாளும் பயிற்சிநெறியை (Basic Dog Handling Course – 01/2026) வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படைப் பணியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, கடற்படை காலாட்படைத் தளபதி ரியர் அட்மிரல் குசல் திசாநாயக்க தலைமையில், 2026 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வெலிசர கடற்படை தொழில்நுட்ப நிறுவன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஆறு மாத காலப் பயிற்சிக் காலப்பகுதியின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சிநெறியில், பெல்ஜியன் மலினோய்ஸ் (Belgian Malinois) இனத்தைச் சேர்ந்த நான்கு நாய்க்குட்டிகளும், நான்கு கடற்படை நாய் கையாளுநர்களும் பங்கேற்றதுடன், கடற்படையின் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவில் இணைக்கப்பட்ட அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்களால் இப்பயிற்சிநெறி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, நாய்களின் கீழ்ப்படிதல், வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப செயற்படுதல், தடைகளைத் தாண்டுதல், போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறியும் திறன், அத்துடன் நடவடிக்கைகளின்போது நாய்க்கும் அதனைக் கையாளுபவருக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணுதல் உள்ளிட்ட நாய்களைக் கையாள்வது தொடர்பான அத்தியாவசியத் திறன்களைப் பயில்வதற்குத் தேவையான பயிற்சிகள் இப்பயிற்சிக் காலப்பகுதியில் வழங்கப்பட்டன.

இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், வெலிசர கடற்படை கட்டளை அதிகாரி கெப்டன் சாலிய பரணகம உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படைப் பணியாளர்கள் கலந்துகொண்டதுடன், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுக்கு இணையாக நாய்களின் திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சியொன்றும் அங்கு நடத்தப்பட்டது.

மேலும், இவ்வாறான பயிற்சிநெறிகள் மூலம் கடற்படையின் உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் தொழில்சார் திறன்கள் மேம்படுத்தப்படுவதுடன், அதன் மூலம் நாய்கள் பிரிவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

Accessibility Tools