EVENT NEWS › 2026

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவினர் இலங்கை தேசிய நீரியல் அலுவலகத்திற்கு விஜயம்

22 Oct 2026

நீரியல் துறையில் ஒத்துழைப்பையும் திறன் மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகரான லெப்டினன்ட் கொமாண்டர் Florian Bouvenot, லெப்டினன்ட் கொமாண்டர் Gabin Sogorb மற்றும் பிரான்ஸ் நீரியல் மற்றும் கடல்சார் ஆய்வுச் சேவையின் மூலோபாய மற்றும் அபிவிருத்திப் பிரிவைச் சேர்ந்த திருமதி Berenice Lequesne ஆகியோர் இன்று (2026 ஒக்டோபர் 22) கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நீரியல் அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர்.

அதன்படி, இந்த விஜயத்தின் போது, பிரான்ஸ் தூதுக்குழுவினர் தேசிய நீரியல் சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் எஸ். ஜயக்கொடி, கடற்படையின் நீரியல் பிரிவின் பிரதானியான ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன மற்றும் தேசிய நீரியலாளரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோருடன் கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நீரியல் அலுவலகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். இதன் போது, நீரியல் துறையில் ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட இருதரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மேலும், இந்தக் கலந்துரையாடலில் கடற்படையின் நீரியல் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டதுடன், இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Accessibility Tools