EVENT NEWS › 2026

இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து காலி முகத்திடலில் கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தனர்

27 Oct 2026

உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த ‘INS TIR’, ‘INS SUJATA’ மற்றும் ‘ICGS SARATHI’ ஆகிய கப்பல்களின் அங்கத்தவர்கள், இலங்கை கடற்படையுடன் இணைந்து மேற்கொண்ட கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்று, இன்றைய தினம் (2026 ஒக்டோபர் 27) கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய கடற்கரைகளை உள்ளடக்கிய வகையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, இந்தக் கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தில் இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்களின் அங்கத்தவர்கள், மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மற்றும் பயிற்சி பெறும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்போது, காலி முகத்திடல் கடற்கரைப் பகுதியில் சிதறிக் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட பெருமளவிலான திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக அகற்றும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

Accessibility Tools