EVENT NEWS › 2026

இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த ‘INS TIR’, ‘INS SUJATA’ மற்றும் ‘ICGS SARATHI’ ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளன

26 Oct 2026

இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த ‘INS TIR’, ‘INS SUJATA’ மற்றும் ‘ICGS SARATHI’ ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் (2026 ஒக்டோபர் 26) நாட்டை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினரால் அக்கப்பல்கள் கடற்படை மரபுகளுக்கமைய கொழும்பு துறைமுகத்தில் வரவேற்கப்பட்டன.

இவ்வாறு பயிற்சி பெறும் 135 அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘Training Ship’ வகையைச் சேர்ந்த ‘INS TIR’ கப்பலானது 107 மீட்டர் நீளமுடையதுடன், அதன் கட்டளை அதிகாரியாக கெப்டன் Tijo K Joseph கடமையாற்றுகிறார். அத்துடன், 102 மீட்டர் நீளமுடைய OPV வகையைச் சேர்ந்த ‘INS SUJATA’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Jishnu Madhavan கடமையாற்றுவதுடன், 105 மீட்டர் நீளமுடைய CG OPV வகையைச் சேர்ந்த ‘ICGS SARATHI’ கப்பலின் கட்டளை அதிகாரியாக Commandant Kundan Singh கடமையாற்றுகிறார். இக்கட்டளை அதிகாரிகளுக்கும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்றைய தினம் (2026 ஒக்டோபர் 26) அக்கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மேலும், இக்கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு நாட்டு கடற்படைகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பயிற்சி பெறும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதுடன், இக்கப்பல்களின் பயிற்சி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கும் அது தொடர்பான தொழில்முறை அறிவை பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிட்டும்.

மேலும், இந்த கப்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் பயிற்சி பெறும் அதிகாரிகள் நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்காக நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

Accessibility Tools