"சிறந்த சர்வதேச மாணவர் விருதை" வென்ற லெப்டினன்ட் கமாண்டர் மதுஷிகா கத்ரிஆரச்சிக்கு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து முதுகலை பட்டம் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் மொன்டேரியில் (Monterey) அமைந்துள்ள கடற்படை முதுகலை கல்லூரியில் (U.S. Naval Postgraduate School – NPS) பாதுகாப்பு விநியோக மேலாண்மை (Defense Logistics Management) பாடநெறியைச் மிகச்சிறந்த திறமைகளுடன் நிறைவு செய்த லெப்டினன்ட் கமாண்டர் மதுஷிகா கத்ரிஆரச்சிக்கு, முதுகலை பட்டம் வழங்கும் நிகழ்வு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மதிப்பிற்குரிய Eric S. Meyer அவர்களால் இன்று (2026 ஒக்டோபர் 26) கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் நடைபெற்றது.
அதற்கமைய, 2024 ஜூன் முதல் 2025 டிசம்பர் வரை நடைபெற்ற இப்பாட்டநெறியின் போது, கடற்படை முதுகலை கல்லூரியினால் இவருக்கு "சிறந்த ஆய்வேட்டுக்கான விருது" (Outstanding Thesis Award) வழங்கப்பட்டதுடன், அமெரிக்காவின் Kiwanis Club of Monterey இனால் ஒவ்வொரு ஆண்டும் கடற்படை முதுகலை கல்லூரியில் கல்வி கற்கும் இரு (02) சர்வதேச மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் "சிறந்த சர்வதேச மாணவர் விருதையும்" (Outstanding International Student Award) பெற்றுக்கொண்டு, "சிறந்த பட்டதாரியாக" (Distinguished Graduate) கௌரவமான முறையில் இம்முதுகலை பட்டத்தினை இவர் பெற்றுக்கொண்டார்.
மேலும், லெப்டினன்ட் கமாண்டர் மதுஷிகா கத்ரிஆரச்சி சர்வதேச ரீதியில் பெற்ற இந்த வெற்றியானது, இலங்கை கடற்படைக்கு பெருமை சேர்த்துள்ளதோடு, கடற்படையின் பயிற்சி மற்றும் அபிவிருத்தித் துறை பெற்ற ஒரு சிறப்பான வெற்றியாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், இப்பட்டமளிப்பு விழாவில் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.













