EVENT NEWS › 2026

இத்தாலியில் நடைபெற்ற பிராந்தியங்களுக்கிடையிலான கடல்சார் வலிமை மாநாட்டில் கடற்படைத் தளபதி பங்கேற்பு

12 Oct 2026

இத்தாலியக் கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 15 ஆவது பிராந்தியங்களுக்கிடையிலான கடல்சார் வலிமை மாநாடு (Trans-Regional Seapower Symposium), 2026 ஒக்டோபர் மாதம் 06 மற்றும் 07 ஆகிய இரு தினங்களில், இத்தாலியின் வெனிஸ் நகரில் (The Ancient Arsenal of the Italian Navy) வெற்றிகரமாக நடைபெற்றது. இம்மாநாட்டில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள் கலந்துகொண்டார்.

1996 ஆம் ஆண்டு முதல் இத்தாலியக் கடற்படையினால் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இம்மாநாடு, இத்தாலியின் வெனிஸ் நகரில் செரெனிசிமா பகுதியில் அமைந்துள்ள கடல்சார் இராணுவக் கற்கைகள் நிறுவனத்தில் நடைபெற்றது. இம்முறை இம்மாநாட்டின் கருப்பொருளாக (From Regional Waters to Global Influence: Generating Effects Across the Midland Seas of the World) அமைந்திருந்தது.

இம்மாநாட்டில் வெளிநாட்டு கடற்படைத் தளபதிகள், பிரதிநிதிகள் மற்றும் கல்வித்துறை, கைத்தொழில்துறை, விஞ்ஞான ஆராய்ச்சித்துறை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

உலகளாவிய சமநிலையில் கடல்சார் களங்கள் தொடர்பான பிராந்திய இயக்கவியலின் முக்கியத்துவம் மற்றும் தாக்கங்களைப் பகுப்பாய்வு செய்யும் நோக்கில் நடைபெற்ற இம்மாநாடு, பல்வேறு சமகாலத் தலைப்புகளின் கீழ் இடம்பெற்ற பல அமர்வுகளைக் கொண்டிருந்தது.

அதற்கமைய, 'The Geopolitical Background: Global and Regional Dynamics in Comparison', 'The Pivotal Role of Cooperation among Regional Alliances as Security Providers', 'Maritime Regional Security Complexes, Global Order and Sea-Based Flows - What role for Navies?', 'The New Arctic Chessboard: Seapower, Resources and the Race for Connectivity', 'Future-Proof capabilities: A naval force designed to operate across oceans, act within regions, and deliver effects on the ground', 'Future Seas: Industrial Scale, Decisive Mass and Innovation. Securing the Maritime Domain') மற்றும் 'Future-Proof Leadership: Preparing Maritime Commanders and sailors for Complexity ஆகிய கருப்பொருள்களின் கீழ் நடைபெற்ற அமர்வுகளில், கடற்படைத் தளபதிகள் மற்றும் கடல்சார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், பிராந்தியங்களுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக ஆழமான கலந்துரையாடல்களிலும் கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபட்டனர்.

மேலும், உலகளாவிய கடல்சார் பங்குதாரர்கள் பலரும் பங்கேற்கும் இத்தகைய மாநாடுகள் மூலம் கட்டியெழுப்பப்படும் ஒத்துழைப்பின் ஊடாக, பாதுகாப்பான, அமைதியான, செழிப்பான மற்றும் நிலையான கடல்சார் பிராந்தியத்தைப் பேணுவதற்காக, கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் கூட்டாகச் செயற்படுவதற்கான திறனை இலங்கை கடற்படைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

Accessibility Tools