EVENT NEWS › 2026

தம்பகொலபடுன விகாரையில் ஆண்டுதோறும் நடைபெறும் கடின மகோற்சவம் கடற்படையின் பங்களிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது

31 Oct 2026

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் அமைந்துள்ள தம்பகொலபடுன விகாரையின் வருடாந்த கடின புண்ணிய மகோற்சவம் இன்று (2026 ஒக்டோபர் 31) நாகதீப புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும், வட இலங்கையின் பிரதம சங்கநாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தனவின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலின் கீழ், அக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடின புண்ணிய மகோற்சவம், 2026 ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மாலை தம்பகொலபடுன விகாரையில் இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் பௌத்த சமய வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்று (2026 ஒக்டோபர் 31) காலை, இலங்கை கடற்படைக் கப்பலான அக்போ நிறுவனத்திலிருந்து வண்ணமயமான பெரஹெர மூலம் கடின சீவரம் தம்பகொலபடுன விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கடின சீவர பூஜையை நிகழ்தி, பௌத்த சமய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு காலை தானம் மற்றும் பரிக்கர வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும், இக்கடின புண்ணிய மகோற்சவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி (ஓய்வு), வடக்கு கடற்படை கட்டளையின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன உள்ளிட்ட அக்கட்டளையைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools