இலங்கை கடற்படையின் கடல்சார் பொறியியல் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் கடற்படைத் தலைமையகத்தில்
இலங்கை கடற்படையின் கடல்சார் பொறியியல் தொழில்நுட்ப அறிவையும், கடற்படைக் கப்பல்களைப் பராமரிக்கும் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில், Yanmar Asia Singapore Corporation மற்றும் Browns Group Industries (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தொழில்நுட்பக் கலந்துரையாடல் ஒன்று 2026 ஒக்டோபர் 22 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தின் பொறியியல் பணிப்பாளர் நாயகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தத் தொழில்நுட்பக் கலந்துரையாடலின் போது, இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதான இயந்திரங்களின் பரிசோதனைகள் தொடர்பான கண்காணிப்பு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், Yanmar 6LY 440 Common-Rail Marine டீசல் பிரதான இயந்திரங்களின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், Yanmar Asia மற்றும் Browns Group Industries ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, பிரதான இயந்திரங்களைப் பராமரிப்பதில் இலங்கை கடற்படை எதிர்கொள்ளும் சவால்கள், பிரதான இயந்திரங்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் கடற்படைக் கலங்களின் செயல்பாட்டுத் தயார்நிலையை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக பயனுள்ள தொழில்நுட்பக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
மேலும், Central Yanmar Workshop இல் Yanmar 6LY2A-STP கடல்சார் டீசல் இயந்திரங்களின் முழுமையான திருத்தப் பணிகள் தொடர்பாக நடத்தப்பட்ட மூன்று நாள் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படை வீரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், குறித்த இயந்திரங்களைப் பராமரிப்பதற்குத் தேவையான விசேட உபகரணங்களும் அடையாளபூர்வமாகக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், கப்பல்தளப் பொறியியல் பணிப்பாளர் கொமடோர் சிசிர உடுகமகே மற்றும் பொறியியல் சேவைகள் பணிப்பாளர் கொமடோர் தினுக் போகஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.













