EVENT NEWS › 2026

இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் தந்திரிமலையில் மக்களிடம் கையளிப்பு

29 Oct 2026

இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் மகாவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தந்திரிமலை கிவுலேகட பகுதியில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் (01) இன்று (2026 ஒக்டோபர் 29) பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

சிறுநீரக நோய் அதிகளவில் பதிவாகும் மகாவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தந்திரிமலை கிவுலேகட பகுதி மக்களுக்குத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொள்வது பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக நிலவி வந்தது.

அதன்படி, இப்பிரச்சினைக்குத் தீர்வாக, சுகாதார அமைச்சின் தலைமையில், இலங்கை கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவப் பங்களிப்புடன், “Serve With Smile” அமைப்பின் தலைவர் திரு காமினி களுபோவில அவர்களின் நிதிப் பங்களிப்புடன் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம், கிவுலேகட பகுதி மக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

மேலும், இந்த மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டதன் மூலம், இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் இதுவரை 1,164 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools