EVENT NEWS › 2026

இலங்கை கடற்படைக் கப்பலான கோகண்ண நிறுவனத்தின் புதிய கட்டளை அதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்

22 Oct 2026

இலங்கை கடற்படைக் கப்பலான கோகண்ண நிறுவனத்தின் புதிய கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கொமாண்டர் (கா.ப) விதான ரூபசிங்க, இன்று (2026 ஒக்டோபர் 22) தனது கட்டளை அதிகாரி பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

அதன்படி, கடற்படை மரபுகளுக்கு அமைய, புதிய கட்டளை அதிகாரி இலங்கை கடற்படைக் கப்பலான கோகண்ண நிறுவனத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய கொமாண்டர் (கா.ப) சின்தன பெரேரா, புதிய கட்டளை அதிகாரியிடம் கடமைகளை கையளித்தார்.

மேலும், கொமாண்டர் (கா.ப) விதான ரூபசிங்க, இதற்கு முன்னர் வடக்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான வேலுசுமண நிறுவனத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியதுடன், 30 ஆவது கெடட் அதிகாரி ஆட்சேர்ப்பை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியுமாவார்.

Accessibility Tools