வடக்கு கடற்படை கட்டளையின் நிறுவனங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட வினா–விடைப் போட்டி – 2026 வெற்றிகரமாக நிறைவடைந்தது
வடக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான நிறுவனங்களுக்கு இடையிலான வினா–விடைப் போட்டியின் இறுதிப் போட்டி, வடக்கு கடற்படை கட்டளையினால் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன தலைமையில், 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி இலங்கை கடற்படைக் கப்பல் உத்தர நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கடற்படைப் வீரர்களின் அறிவு, தொழில்சார் திறன்கள் மற்றும் அறிவுசார் ஆற்றல்களை மேம்படுத்துவதுடன், குழு உணர்வையும் போட்டி மனப்பான்மையையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியானது, அதிகாரிகள் மற்றும் கடற்படை வீர்ர்கள் என இரு பிரிவுகளின் கீழ், 2026 செப்டெம்பர் 18, 19 மற்றும் ஒக்டோபர் 22 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதன்படி, அதிகாரிகள் பிரிவின் இறுதிப் போட்டியில் இலங்கை கடற்படைக் கப்பல்களான உத்தர மற்றும் கோட்டையம்பர ஆகியவற்றின் கூட்டுக் குழுவைத் தோற்கடித்து, இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களத்தின் வடக்குப் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழு அதிகாரிகள் பிரிவின் சம்பியன் பட்டத்தை வென்றது. கடற்படை வீர்ர்கள் பிரிவின் இறுதிப் போட்டியில், இலங்கை கடற்படைக் கப்பல் உத்தர நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவைத் தோற்கடித்து, வடக்கு கடற்படை கட்டளையகத்திற்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் படகுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழு சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது.
மேலும், வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசில்களை வழங்கும் நிகழ்வு, வடக்கு கடற்படை கட்டளையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன தலைமையில், வடக்கு விநியோக மற்றும் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கொமடோர் சஞ்சீவ கருணாரத்ன மற்றும் வடக்கு கப்பற்படை பணிப்பாளர் கொமடோர் துசித வீரசூரிய ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், வடக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் உள்ள திணைக்களத் தலைவர்கள், கட்டளை அதிகாரிகள், கப்பல்கள் மற்றும் படகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட கடற்படைப் வீர்ர்கள் பலரும் கலந்துகொண்டனர்.













