EVENT NEWS › 2026

உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

13 Oct 2026

உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொப்பி நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக, இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் பொப்பி குழுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களினால், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்கு பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு இன்று (2026 ஒக்டோபர் 13) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போதும், தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து வீரமிக்க போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்தப் பொப்பி மலர் நினைவேந்தல் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய, உயிர்நீத்த அனைத்து வீரமிக்க போர் வீரர்களையும் நினைவுகூரும் வகையில், இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் பொப்பி குழுத் தலைவரினால் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு இவ்வாறு இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools