EVENT NEWS › 2026

Pre Command Training – (PCT) பாடநெறி திருகோணமலையில் ஆரம்பம்

06 Oct 2026

இலங்கை கடற்படைக் கப்பல்கள்/படகுகளின் கட்டளை அதிகாரிகளாகப் பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்காகக் கப்பற்படைக் கட்டளையினால் 15 ஆவது தடவையாகவும் நடாத்தப்படும் Pre Command Training - PCT பாடநெறி, 25 அதிகாரிகளின் பங்கேற்புடன் 2026 ஒக்டோபர் 05 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத் தளத்தில் ஆரம்பமானதுடன், இதன் ஆரம்ப நிகழ்வு கப்பற்படைக் கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ஹரித ஜயதேவ தலைமையில் நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடநெறி, எதிர்காலத்தில் கப்பல்களின் கட்டளை/பொறுப்பு அதிகாரிகளாகச் செயலாற்றவுள்ள அதிகாரிகளின் தொழில்முறைத் திறன், தலைமைத்துவ ஆளுமை மற்றும் கட்டளையிடும் தயார்நிலை என்பவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில், தத்துவார்த்த மற்றும் நடைமுறை சார்ந்த திட்டங்களை உள்ளடக்கி இந்தப் பயிற்சிப் பாடநெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Accessibility Tools