புதிய கடற்படைப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக ரியர் அட்மிரல் ரோஹான் ஜோசப் கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் புதிய பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரோஹான் ஜோசப், இன்று (2026 ஒக்டோபர் 12) கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கான கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 12 ஆவது ஆட்ச்சேர்ப்பை சேர்ந்த கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து, 1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ரோஹான் ஜோசப், பயிற்சிப் பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், இலங்கை கடலோரக் காவல்படைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றினார்.
1 /
6













