வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றார்
வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன, இன்று (2026 ஒக்டோபர் 23) வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் அக்கட்டளையின் தளபதியாகத் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
இலங்கை கடற்படையின் மரபுகளுக்கு அமைவாக, புதிய தளபதி வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்டளையின் கட்டளை தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் இந்திக த சில்வா, தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகப் புதிய தளபதியிடம் கடமைகளை ஒப்படைத்தார்.
மேலும், 23 ஆவது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரியாக இணைந்து, 1996 ஜூன் மாதம் 20 ஆம் திகதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சஞ்சீவ பிரேமரத்ன, வடமத்திய கடற்படை கட்டளையின் தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பணிப்பாளர் நாயகமாக (நபர்கள்) கடமையாற்றி வந்தார்.













