EVENT NEWS › 2026

இலங்கை கடற்படைக் கப்பல் ‘மஹாநாக’ தனது 13ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

28 Oct 2026

தென்கிழக்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் ‘மஹாநாக’ நிறுவனத்தின் 13 ஆவது ஆண்டு நிறைவு, இன்று (2026 ஒக்டோபர் 28) பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

அதன்படி, ‘மஹாநாக’ நிறுவனத்தின் 13ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடற்படை மரபுகளுக்கு அமைய, கடற்படையினரின் பிரிவுப் பரிசோதனை நிகழ்வு, குறித்த நிறுவனத்தின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் துலான் தர்ஷனவினால் அன்றைய தினம் காலை மஹாநாக நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய விருந்துபசாரம் பொது உணவகத்தில் நடைபெற்றது.

மேலும், 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி நிறுவப்பட்ட மஹாநாக நிறுவனத்தின் 13ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உயிர்நீத்த கடற்படைப் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில், பௌத்த சமய மரபுகளுக்கு அமைய மதிய தான நிகழ்வொன்று 2026 ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி குடும்பிகல விகாரையில் நடத்தப்பட்டது.

Accessibility Tools