உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 'விஜயபாகு' மற்றும் 'கஜபாகு' கப்பல்களில் விசேட சிறுவர் தின நிகழ்ச்சித் திட்டம் ஒன்று நடாத்தப்பட்டது
ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிரச தொலைக்காட்சி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சிறுவர் தின நிகழ்ச்சியொன்று இன்று (2026 ஒக்டோபர் 03) கொழும்பு துறைமுக வளாகத்தில் நிலைகொண்டுள்ள இலங்கை கடற்படைக் கப்பல்களான விஜயபாகு மற்றும் கஜபாகு ஆகிய கப்பல்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டின் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, மனதளவில் வலிமையான வளமான குழந்தைகள் என்ற தொனிப்பொருள் தேசிய தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 'விஜயபாகு' மற்றும் 'கஜபாகு' ஆகிய கடற்படைக் கப்பல்களில் நடைபெற்ற உலக சிறுவர் தின நிகழ்ச்சியின் போது, 50 சிறுவர்களுக்கும் அவர்களது 50 பாதுகாவலர்களுக்கும் குறித்த கப்பல்களைப் பார்வையிடுவதற்கான வசதிகளை இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்ததுடன், சிறுவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மேலும், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட கடற்படைப் பணியாளர்கள் குழுவினரும் கலந்துகொண்டனர்.













