EVENT NEWS › 2026

கடற்படை மரியாதையுடன் வைத்தியர் ரியர் அட்மிரல் ஜானக மாரபே கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

16 Oct 2026

இலங்கை கடற்படையில் 31 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த வைத்தியர் ரியர் அட்மிரல் ஜானக மாரபே, இன்று (2026 ஒக்டோபர் 16) கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தலைமையிலான கடற்படை நிர்வாகக் குழு, இன்றைய தினம் தனது 63 வது பிறந்தநாளைக் கொண்டாடும் வைத்தியர் ரியர் அட்மிரல் ஜானக மாரபேவிற்கு கடற்படை தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், கடற்படை பாரம்பரிய முறைப்படி சிறப்பு அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்குக் கௌரவம் அளிக்கப்பட்டது. பின்னர், சக அதிகாரிகளிடம் விடைபெற்று கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்பட்ட போது, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் வைத்தியர் ரியர் அட்மிரல் ஜானக மாரபேவிற்கு கடற்படை பாரம்பரிய முறைப்படி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

1995 ஆம் ஆண்டு நேரடி ஆட்சேர்ப்பு அதிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்த வைத்தியர் ரியர் அட்மிரல் ஜானக மாரபே, தனது 31 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக் காலத்தில், கடற்படையின் கெப்டன் வைத்திய திணைக்களம் கிழக்கு மற்றும் மேற்கு ஆக கடமையாற்றியுள்ளார். மேலும், வைத்தியர் ரியர் அட்மிரல் ஜானக மாரபே, பிராந்திய கொமடோர் சுகாதார அதிகாரி (கிழக்கு), கடற்படை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் (நோயறிதல் மற்றும் சிகிச்சை) மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் போன்ற முக்கிய பதவிகளை வகித்த இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.

Accessibility Tools